உயிரிழந்த மீனாவின் கணவருக்கு இரங்கல் கூறிய நடிகை குஷ்பூ

0
312

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான வலம்வந்த பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு நோய் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்தார்.

அவரின் மரணம் திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீனா கணவர் இறப்பு தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நடிகை குஷ்பூ நடிகை, ‘மீனாவின் கணவர் வித்யாசாகர் நம்மிடையே இல்லை என்று கேள்விப்பட்டவுடன் மனமுடைந்தேன்.

அவர் நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். வாழ்க்கை மிகவும் குரூரமானது என்பது இந்த இறப்பின் மூலம் தெரியவருகிறது.

மீனா மற்றும் அவரது மகளை நினைத்து என் மனம் வலிக்கின்றது. இதற்கு மேல் என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் இன்னொரு பதிவில்,

’இந்த நேரம் ஊடகங்கள் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றும், மீனாவின் கணவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்றும் அவரது நுரையீரல் வெகுவாக பாதித்தது என்றும் எனவே தயவு செய்து அவர் கொரோனாவால் இறந்ததாக தவறான தகவலை பரப்பி மக்களை அச்சுறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ’பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது அவசியம்தான் என்றாலும் தயவு செய்து மக்களை பயமுறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.