ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை நடுரோட்டில் விழவைத்த தேங்காய்!

0
749

மலேசியாவில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் அவர் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தார்.

மலேசியாவில் உள்ள பினாங்கு தீவு ஜாலான் தெலுக் கும்பார் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இணையத்தில் பரவி வருகிறது. புவான் அனிதா என்பவர் சாலையில் தன் மகளுடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். ஸ்கூட்டரை அவரது மகள் ஓட்டிக் கொண்டிருந்தார்.

இதன்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று கீழே விழுந்தது. அது அனிதாவின் தலையில் காயத்தை ஏற்படுத்தியது. இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதனையடுத்து வீதியால் சென்றவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.