வயிற்றை டூல்ஸ் பொக்ஸ் போல மாற்றிய நபர்!

0
575

வீட்டில் இருக்கும் சின்ன சின்ன பொருட்கள், நாணயங்கள், நட், போல்ட்ஸ் போன்றவற்றை குழந்தைகளே பொதுவாக விழுங்குவது வழக்கம்.

அப்படி சில பொருட்களை விழுங்கிய குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து உடனடியாக அவற்றை மருத்துவர்கள் அப்புறப்படுத்துவார்கள்.

ஆனால் 35 வயதுடைய நபர் குழந்தை போல செய்த செயலைப் பற்றிதான். துருக்கியின் Ipekyolu என்ற பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் திடீரென தனக்கு வயிற்று வலி எனக் கூறியிருக்கிறார். உடனே அவரது சகோதரர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு அவருக்கு எண்டோஸ்கோபி, எக்ஸ்ரே ஆகியவற்றை எடுத்த மருத்துவர்கள் அதன் முடிவை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஏனெனில், அந்த நபரின் வயிற்றில் பேட்டரிகள், காந்தம், நகங்கள், கண்ணாடி துண்டுகள், ஸ்க்ரூஸ், கற்கள் என கிட்டத்தட்ட 233 பொருட்கள் இருந்திருக்கின்றன.

இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த அனைத்து பொருட்களையும் மருத்துவர்கள் வெளியேற்றி இருக்கிறார்கள். இது தொடர்பாக பேசியுள்ள மருத்துவர் பினிசி, “அறுவை சிகிச்சையின்போது ஒன்றிரண்டு நகங்கள் வயிற்றுச் சுவரில் துளைத்திருப்பதை கண்டோம்.

பெருங்குடலில் இரண்டு உலோகத் துண்டுகள் மற்றும் பல்வேறு அளவுகளில் இரண்டு கற்கள் இருப்பதையும் கவனித்தோம். அவரது வயிற்றை முழுவதுமாக சுத்தப்படுத்தி விட்டோம்.

இது மாதிரியான சம்பவங்கள் பெரும்பாலும் குழந்தைகள், சிறார்களிடையேதான் நடக்கும். பெரியவர்களிடத்தில் நடந்தால் அந்த நபர் மனதளவில் பாதிக்கப்பட்டவராவோ அல்லது கைதிகள், குற்றவாளிகள்தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுவார்கள்.

ஆனால் தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளவர் தனது வயிற்றை ஏதோ டூல் பொக்ஸ் போல நினைத்திருக்கிறார் போல, ஏன் அவர் இந்த பொருட்களையெல்லாம் விழுங்கினார் என்பது இன்னும் தெரியவில்லை.” என மருத்துவர் கூறியுள்ளார்.