உக்ரைனில் மீண்டும் ஒரு பயங்கரமான தாக்குதலை நடத்திய ரஷ்யா!

0
649

கிழக்கு உக்ரைனில் உள்ள “நெரிசலான” வணிக வளாகம் மீது ரஷ்ய ராணுவம் நேற்று (27-06-2022) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனை அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதல் நடந்தபோது கிரெமென்சுக்கில் உள்ள வணிக வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று அம்மாநில ஆளுநரை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது டெலிகிராம் பக்கத்தில் “ ரஷ்யா ஆக்கிரமிப்பாளர்கள் வணிக வளாகத்தில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர்.

உக்ரைனில் மீண்டுமொரு கொடூர தாக்குதலை நடத்திய ரஷ்யா! பகீர் காணொளி | Russia Missile Attack Ukraine Mall10 Peoples Died

அப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்தனர். மால் தீப்பிடித்து எரிந்தது. மீட்புப் பணியாளர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கற்பனை செய்ய முடியாதது” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

உக்ரைனில் மீண்டுமொரு கொடூர தாக்குதலை நடத்திய ரஷ்யா! பகீர் காணொளி | Russia Missile Attack Ukraine Mall10 Peoples Died