அவுஸ்திரேலியாவிற்கு தப்பி செல்ல முற்பட்ட 47பேர் கைது

0
262

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட மேலும் 47 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நீர்கொழும்புக்கு அப்பால் மேற்கு கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி இழுவை படகில் பயணித்த போதே இவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

அவர்களில் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய 5 பேர் உட்பட 34 ஆண்களும், 6 பெண்களும் 7 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.