அமைச்சராக பதவியேற்ற தம்மிக்க பெரேரா

0
318

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் தொழிலாதிபர் தம்மிக்க பெரேரா (Dhammika Perera) அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

நேற்றைய தினம் மாலை (24-06-2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) முன்னிலையில் அவர் பதவியேற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதையடுத்து அவ்வெற்றிடத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் மூலம் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 22 ஆம் திகதி அவர் சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றிருந்தார்.