யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் பலி

0
539

யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உடுவிலை சேர்ந்த 24 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சில நாட்களின் முன் எரிபொருள் பெற முண்டியடித்த இளைஞர்களிடையே குழப்பம் ஏற்பட்டு மோதலாகியது.

இதில் இளைஞன் ஒருவரின் முகத்தில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டது. சில பெண்கள் உள்ளிட்ட வேறு சிலரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

முகத்தில் சிறிய காயமடைந்த நிலையில் வீடு திரும்பிய இளைஞன் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது சில நாட்கள் சிகிச்சை பெற்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.