மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 561 கிலோ மீட்டர் தொலைவில் நள்ளிரவு 12.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குறித்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.