இலங்கை சோமாலியா, சூடான் நிலைக்கு சென்றுவிட்டது – யுனிசெப்

0
490

இலங்கையை மிக மோசமான நிலைக்கு தள்ளியவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதான் (Gotabaya Rajapaksa) என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்தது,

இலங்கை தொடர்பில் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்க்கும்போது இலங்கை சோமாலியா, சூடான் நிலைக்கு சென்றுவிட்டதை உணர முடிகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil WIckremesinghe) தலைமையில் நாட்டை கட்டியெழுப்ப புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு மாதங்களுக்கு மேலாகியும் நாட்டை கட்டி எழுப்புவதற்கான எந்தவொரு வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை.

கோட்டாபய – ரணில் தலைமையிலான அரசாங்கம் பதவி விலகி பொதுவான வேலைத் திட்டத்தின் கீழ் இயங்குவதற்கான சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கம் அடுத்த தேர்தல் வரையில் செயற்பட வேண்டும் – என்றார்.

யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையால் அதிருப்தியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!