பௌத்தர்களின் பொறுமையை சோதிக்கவேண்டாம் – சரத்வீரசேகர எச்சரிக்கை

0
233
பௌத்தர்களின் பொறுமையை சோதிக்கவேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பு பௌத்தமதகுருமார்களை பௌத்தபோதனைகளை அவமதிக்கும் கருத்துக்களை வெளியிடுகின்றது என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர பகிரங்க எச்சரிக்கை (VIDEO)

தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலைப்புலிகளின் கொல்லப்பட்ட தலைவர் பிரபாகரனின் கட்சி பிரபாகரன் தமிழ் மக்களை கொலை செய்யும் போது பௌத்தமக்கள் சாதாரண தமிழர்களிற்கு தீங்கிழைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கு எல்லையுள்ளது என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் புத்தர் சிலையை முன்வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி மற்றும் அதனை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் விளக்கமளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.