நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கைக்கு கைகொடுக்கும் அவுஸ்ரேலியா

0
758

நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 50 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்க அவுஸ்ரேலியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் தற்போது மருந்து, உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவு வருகின்றது.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள மூன்று மில்லியன் மக்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய அவசர உணவு உதவிக்காக உலக உணவு திட்டத்திற்கு 22 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கைக்கு கைகொடுக்க முன் வந்துள்ள மற்றுமொரு முக்கிய நாடு!

குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்கும் பொருட்டு அவுஸ்ரேலியா 2022-23 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 23 மில்லியன் டொலர்களை அபிவிருத்தி உதவியாக வழங்கவுள்ளது.

இந்த நன்கொடை இலங்கையில் உள்ள ஐ.நா. முகவர் நிலையங்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட 5 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படும் எனவும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.