முல்லைத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு!

0
223

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினருக்கும் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கும் இடையிலேயே இன்று இரவு 8.00 மணியளவில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

முரண்பாடு தீவிரமடைய பொதுமக்களால் இராணுவத்தினர் மீது போத்தல்கள் வீசப்பட்டதையடுத்து இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயேகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.