மன்னிப்பு கோரிய எயார் கனடா

0
238

விமானம் தாமதமான காரணத்தினால் உயிர் பிரியும் தருவாயில் இருந்த தந்தையை பார்வையிடுவதில் சிரமத்தை எதிர்நோக்கிய பெண்ணுக்கு எயார் கனடா மன்னிப்பு கோரியுள்ளது.

எலிசன் வைற் என்ற பெண்ணிடம் எயார் கனடா விமான சேவை நிறுவனம் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளது.

மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையை பார்வையிடுவதற்காக றொரன்டோவிலிருந்து நோவா ஸ்கோட்டியாவிற்கு எலிசன் வைற் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.

எனினும் குறித்த விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதனால் இருவரும் தொலைபேசி வாயிலாக உயிர் பிரியும் தந்தைக்கு பிரியாவிடை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டமையினால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துவதாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாக எயார் கனடா நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.