இலங்கை சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கை!

0
187

நீதித்துறை மற்றும் நீதித்துறை ஆணைக்குழுவின் கடமைகள் வெள்ளிக்கிழமைகளில் வழமையான முறையில் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் கோரிக்கை முன்வைத்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் பிரதம நீதியரசர் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நிறுவனங்களுக்கும் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோர் கடிதம் மூலம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.