உயிருக்கு போராடும் தந்தைக்கு நேரில் பிரியாவிடை சொல்ல முடியாத மகனும் மகளும் தொலைபேசியில் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.
எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டமையே இதற்கான காரணமாகும்.
கடந்த வாரம் றொரன்டோ பியர்சன் விமான நிலையத்தின் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதனால் பிள்ளைகள் இருவரும் நேரில் தந்தையை பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தந்தையை பார்ப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
றொரன்டோவிலிருந்து நோவா ஸ்கோட்டியாவின் சிட்னிக்கு பயணம் செய்யவிருந்த இரண்டு பிள்ளைகளும் விமான பயணம் செய்து செய்யப்பட்டதனால் உரிய நேரத்தில் தந்தையை பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
தந்தையை நேரில் பார்வையிடுவதற்கு முடியாத காரணத்தினால் இவ்வாறு தொலைபேசி வழியாக தாமும் தமது சகோதரரும் தந்தைக்க பிரியாவிடை வழங்கியதாக அலிசன் வைட் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் உறவினர் ஒருவரின் உதவியுடன் விமானப் பயணத்தை மீளவும் பதிவு செய்து கொண்டு நோவா ஸ்கோட்டியாவிற்கு பயணம் செய்தததாக தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த தந்தையினால் தம்மை அடையாளம் காண முடியவில்லை எனவும் தந்தையின் உயிர் பிரிந்து விட்டதாகவும் அலிஸா தனது வேதனையை வெளியிட்டுள்ளார்.
