3,000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்த தாய்லாந்து!

0
512

தாய்லாந்தில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களின் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்பட்டதை தொடர்ந்து கஞ்சா சார்ந்த குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

சிறை வாசல்களில் காத்திருந்த உறவினர்கள் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஆசிய நாடுகளில் முதல் முறையாகத் தாய்லாந்தில் போதை வஸ்துக்கள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக கஞ்சா செடிகளை பயிரிடவும், உணவில் சேர்த்து கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

அதே சமயம், கஞ்சா புகைப்பது இன்னும் குற்றச்செயலாக கருதப்படுகிறது.