தெருவில் செய்தித்தாள் விற்கும் பிரிட்டிஷ் இளவரசர்!

0
283

பிரித்தானிய இளவரசர் வில்லியம் ஏழை மற்றும் வீடற்ற மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள பத்திரிகை ஒன்றை வீதியில் இறங்கி விற்பனை செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

லண்டனில் ஒரு வியாபாரிக்குரிய உடை மற்றும் தொப்பி அணிந்து குறித்த பத்திரிகையை விற்றுக்கொண்டிருந்த ஓர் நபரை உற்றுக்கவனித்த ஒருவர் அது இளவரசர் வில்லியம் என்று அடையாளம் கண்டுள்ளார்.

இதனையடுத்து அவர் தொலைவிலிருந்து இளவரசர் வில்லியம்சை புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அவதானித்த இளவரசர் வில்லியம் அந் நபரை நெருங்கி ஒரு பத்திரிகை வாங்கிக்கொள்ளமுடியுமா என கேட்டாராம்.

அதற்கு அவர் என்னிடம் சில்லறை இல்லையே என்று கூறியுள்ளார். உடனடியாக ஒரு கைதேர்ந்த வியாபாரியைப்போல மொபைல் கார்டு இயந்திரம் ஒன்றைக் கொடுத்து இதன் மூலம் பணம் செலுத்தலாமே என இளவரசர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இளவசர் வில்லியம் பத்திரிகை விற்கும் படம் சமூக ஊடகம் ஒன்றில் வெளியாக அதை பார்த்த பிரித்தானிய மக்கள் நம் எதிர்கால மன்னர் எவ்வளவு எளிமையானவர் என கூறி வருகின்றார்களாம்.