கெட்டப்பில் வந்த இளைஞரால் உலகப் புகழ் பெற்ற ஓவியத்திற்கு நேர்ந்த நிலை!

0
836

பாரிஸில் உள்ள புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை மூதாட்டி போல வந்து இளைஞர் ஒருவர் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் வாழ்ந்த உலக புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவர் லியானார்டோ டாவின்சி (Leonardo da Vinci).

இவரது மோனலிசா (Mona Lisa) ஓவியம் உலக புகழ்பெற்றது. இந்த ஓவியம் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மியூசியத்திற்கு மூதாட்டி போல கெட்டப்போட்டு வீல் சேரில் சென்ற நபர் திடீரென துள்ளி குதித்து சென்று கேக் க்ரீமை மோனலிசா (Mona Lisa) ஓவியத்தின் மீது பூசியது அங்கிருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து உடனடியாக அருங்காட்சியக காவலர்கள் அந்த இளைஞரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். அதேவேளை மோனலிசா ஓவியத்திற்கு குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் (Mona Lisa) ஓவியம் சேதமாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.