சிறுமி ஆயிஷா படுகொலைக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

0
277

அட்டுலுகம சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்குக் கிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் ஆயிஷாவின் மரணத்துக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.

அதேசமயம் அட்டுலுகம சிறுமி ஆயிஷா படுகொலைக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் 8 மாவட்டங்களில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Gallery