அமெரிக்க சபாநாயகருக்கு கணவரால் ஏற்பட்ட தலைகுனிவு

0
699

மது போதையில் கார் ஓட்டிய அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் (Nancy Pelosi) கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பொலோசி. இவரது கணவர் பால் பொலோசி (Paul Pelosi) (வயது 82). இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை இரவு கலிபோர்னியா மாகாணம் நபா நகரில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு வேகமாக வந்த காரை மறித்த பொலிசார் காருக்குள் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலோசியின் (Nancy Pelosi)  கணவர் பால் பொலோசி (Paul Pelosi)  இருப்பதை அறிந்ததுடன். அவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்ததையும் கண்டுபிடித்தனர்.

பால் பொலோசி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது குடித்துவிட்டு கார் ஓட்டிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் பொலிபோலீஸ் நிலையத்திற்கு அழைத்து இரவு முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை கோர்ட்டில் 5 ஆயிரம் டாலர்கள் பிணை தொகை செலுத்தப்பட்டதை தொடர்ந்து பால் பொலோசிக்கு (Paul Pelosi) ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து பால் பொலோசி (Paul Pelosi) விடுவிக்கப்பட்டார்.