ஒரு போத்தல் பெற்றோலை அநியாய விலைக்கு விற்ற பெண் கைது!

0
298

அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் மனைவி பேருவளை கலாவில கந்தேனிவாச என்ற இடத்தில் சட்டவிரோதமான முறையில் பெற்றோலை அதிக விலைக்கு விற்பனை செய்யும் போது பெற்றோல் கையிருப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்திய விசாரணையில், கணவர் பணி முடிந்து வீடு திரும்பும் போது கொண்டு வரும் பெற்றோலை தான் விற்பனை செய்வதாகக் கூறியுள்ளார்.

பெற்றோல் போத்தல் ஒன்றை 800 ரூபாவுக்கு கொள்வனவு செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வீட்டை சோதனை செய்து பெண்ணைக் கைது செய்ததுடன் பெற்றோல் இருப்பையும் பறிமுதல் செய்ததாக பேருவளை பொலிஸ் பொறுப்பதிகாரி லலித் பத்ம குமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.