ஐபிஎல் கிரிக்கெட்: 2022 சாம்பியன் வென்றது குஜராத் டைட்டன்ஸ்

0
874

கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. குஜராத் – ராஜஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால்-பட்லர் களமிறங்கினர். யாஷ் தயாள் 16 பந்துகளில் 22 ஓட்டங்களில் ஜெய்ஸ்வாலை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக பட்லருடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார். பவுண்டரியுடன் இன்னிங்சை தொடங்கிய சாம்சன் 14 ஓட்டங்களில் குஜராத் அணி கேப்டன் ஹர்திக்கிடம் சாய் கிஷோரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஒருபுறம் பட்லர் கொஞ்சம் கொஞ்சமாக அதிரடி காட்ட தொடங்க, மறுபுறம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. அணியை சரிவில் இருந்து காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து சிம்ரன் ஹெட்மயர் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா வீழ்த்தி அவரே கேட்ச் செய்தார். அதை தொடர்ந்து வந்த வீரர்கள் மிகவும் சோபிக்கவில்லை. இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் எடுத்தது.

குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து 131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ஓட்டங்கள் எடுத்து 2022 ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.