ரஷ்யாவுக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா!

0
167
Two flags

ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உக்ரைனுக்கு நீண்ட தூர ரொக்கெட் ஏவுகணை அமைப்புகளை அனுப்ப அமெரிக்கா தயாராகி வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களில் குறிப்பிடத்தக்க அடுத்தகட்ட படியாக இருப்பதாக, CNN செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் வேண்டுகோளைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ரொக்கெட்டுகளை சரமாரியாகச் செலுத்தக்கூடிய இத்தகைய அமைப்பு உக்ரைனுக்கு கிடைக்கவுள்ளது.

இந்நிலையில் அமரிக்கா வழங்கவுள்ள மல்டிபிள் லாஞ்ச் ரொக்கெட் சிஸ்டம்ஸ் (Multiple Launch Rocket Systems) உக்ரைனின் ஆயுதப் படைகளின் வரம்பை வியத்தகு முறையில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.