வன்முறைகளின் போது முப்படையினர் அசமந்தப் போக்குடன் செயற்பட்டனரா ? – ஆராய விசேட குழு

0
75
A Sri Lankan government supporter carries a national flag after attacking the anti-government protesters outside president's office in Colombo, Sri Lanka, Monday, May 9, 2022. Government supporters on Monday attacked protesters who have been camped outside the offices of Sri Lanka's president and prime minster, as trade unions began a “Week of Protests” demanding the government change and its president to step down over the country’s worst economic crisis in memory. (AP Photo/Eranga Jayawardena)

நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி மிரிஹாணை பிரதேசத்திலும் , இம்மாதம் 9 ஆம் திகதி நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைகளின் போது ஏதேனுமொரு வகையில் முப்படையினர் அசமந்த போக்குடன் செயற்பட்டனரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட குவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அத்மிரால் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட , மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக மற்றும் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.