காணாமலாக்கப்பட்டவர்கள் பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்தில் இலங்கை

0
452

இலங்கையில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி மிரிஹானவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதியின்மையின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முப்படை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட, விமானப்படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்க மற்றும் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

11 இளைஞர்கள் கடத்தல் தொடர்பான விசாரணை - அட்மிரல் வசந்த கரன்னாகொட, தலைமறைவு?  - GTN
கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட

மார்ச் 31ஆம் திகதி மிஹிரணவில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் மே 09ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது இடம்பெற்ற சம்பவங்களின் போது முப்படையினருக்கு ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்வதற்காகவே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டின் பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் விமானப்படைத் தளபதி  நியமனம்
விமானப்படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்க

பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, மிரிஹானவில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக பொதுமக்கள் முதல் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

On a Mission - General R.M. Daya Ratnayake, Chairman of the Sri Lanka Ports  Authority - The CEO Magazine Sri Lanka
ஜெனரல் தயா ரத்நாயக்க

போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது, பொதுமக்கள் பலர் காயமடைந்தனர் மற்றும் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கிடையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) விசுவாசிகள், அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகாமையிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, மே 09 அன்று இலங்கை முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது.

இரண்டு நிகழ்வுகளிலும், வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதாக படைகள், குறிப்பாக காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டது.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரத்தில் வசந்த கரன்னகொட மீது சர்வதேச மன்னிப்புச் சபை முன்னர் சுட்டிக்காட்டிய குற்றச்சாட்டு

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த காலங்களில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா இவ்வாறு கடந்த வருடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர் தெரிவித்துள்ளமை,

பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல்போன நிலையில், கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்கள் பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கு ஏற்கனவே இலங்கை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட தடைகளால் தடைப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்,  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் அதன் முடிவிற்கான காரணங்களை விளக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை அதிகாரிகள் காணாமல் போன மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்து கமையான அறிக்கைகள் வெளியாகி கண்டனங்கள் விடுக்கப் பட்ட சூழ்நிலையில் மே மாதம் 09ஆம் திகதி மிரிஹானவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதியின்மையின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள் கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட நியமிக்கப் பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.