ஆப்கானில் முகத்தை மூடி செய்தி வாசித்த ஆண்கள்!

0
194

ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது உடலை முழுவதும் மூடக்கூடிய வகையில் புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என கடும் கட்டுப்பாடுகளை தலிபான்கள் விடுத்துள்ளனர்.

Female Afghan TV anchors forced to wear face-covering after Taliban order |  The Independent

அத்துடன் இந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காதவர்கள் அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாடா உத்தரவிட்டார்.

தலிபான்களின் இந்த உத்தரவுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்து.

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே ஆப்கானில் இந்த பிற்போக்குத்தனமான உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை முதல் பொதுவெளிகளில் வரும் பெண்கள் தங்கள் உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா வகை ஆடைகளை அணிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொலைக்காட்சி நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை முகத்தை மறைத்து திரையில் தோன்றும்படி அறிவுறுத்தியுள்ளன. இதுகுறித்து செய்தி வாசிப்பாளர் மஹிரா கூறும்போது,

“கடந்த சனிக்கிழமை எனக்கு மிகவும் கடினமான நாளாக இருந்தது. நான் புர்கா அணிந்திருந்தபோது என்னை நான் மனித இனமாகவே உணரவில்லை. நாங்கள் உயிருடன் புதைக்கப்பட்டதைப் போன்ற உணர்வை அவர்கள் ஏற்படுத்தினார்கள். நான் மிகப் பெரிய தவறு செய்திருக்கிறேன் அதனால்தான் இறைவன் என்னை ஆப்கான் பெண்ணாக பிறக்கச் செய்துள்ளார்.

எந்தச் சட்டத்தில் சொல்கிறது, தொலைக்காட்சியில் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்து கொள்ள வேண்டும் என. ஆனால் அரபு நாடுகளில் கூட பெண்கள் தங்கள் முகத்தை மூடுவது இல்லை” என்று தெரிவித்தார்.

ஆப்கானில் முகத்தை மூடி  செய்தி வாசித்த ஆண்கள்! காரணம் என்ன தெரியுமா?

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற தலிபான்களின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் செய்தியாளர்களும் முகத்தை மூடி செய்திகளை வாசித்துள்ளனர். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பெண் செயற்பாட்டாளர் சாஹர் ஃபெட்ரத் தனது டுவிட்டர் பக்கத்தில், ”ஆண் செய்தியாளர்களும் தங்களது முகத்தை மறைந்துள்ள செயல் நிச்சயம் பாராட்டப்படக் கூடியது. நாடு முழுவதும் பெண்களே இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பு வந்த வேளையில், ஆண்களின் இந்த முயற்சி பாராட்டக் கூடியது” என பதிவிட்டுள்ளார்.  

Taliban ordered female newscasters to cover their faces. Male colleagues  joined in protest. - The Washington Post