எரிபொருளுக்காக காத்திருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி கொள்ளை

0
232

மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் நின்ற பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தசம்பவம் தம்புள்ளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் வரிசையில் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சங்கிலியை பறிகொகொடுத்த தம்புள்ளையைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பறிபோன தங்க நகையின் பெறுமதி சுமார் 500,000 ரூபா என முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.