ஐந்து நாட்களாக இருளில்… கனேடிய நகர மக்கள் தவிப்பு

0
501

ஆயிரக்கணக்கான ஒட்டாவா நகர மக்கள் மின்சாரம் இல்லாமல் ஐந்து நாட்களைக் கடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திடீரென்று ஏற்பட்ட இந்த இக்கட்டான சூழ்நிலைகள் பலருக்கு சவாலாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் மருத்துவ சிகிச்சை நாடிவரும் ஒட்டாவா நபர், கடந்த ஐந்து நாட்களும் மிகக் கடுமையானது என்றார். ஒவ்வொரு நாளும் மருத்துவமனையின் 911 இலக்கத்திற்கு அழைப்பு விடுக்கும் சூழலை எதிர்பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புயல் தாக்குவதற்கு முன்னர் தமது நண்பர் ஒருவரின் உதவியுடன் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றை நிரப்பி வைத்துள்ளார். அதுவே தற்போது தமக்கு பேருதவியாக அமைந்தது என 66 வயதான அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான சூழலில் அண்டைவீட்டாரும் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். அவர் ஒரு ஆக்ஸிஜன் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார், இது அவரது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது என்கிறார் அவரது நண்பர்.

38 லிற்றர் திரவ ஆக்சிஜன் நிரப்பிய உருளையால் நான்கு நாட்கள் பயன்படுத்த முடியும். மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்துள்ளதால், இன்னொரு சிலிண்டருக்கு முயற்சிக்க வேண்டும் என்கிறார் அவர்.