ஞானாக்காவின் வாக்கை நம்பிருக்கும் இராணுவ தளபதி!

0
226

இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய நபராக வலம் வருபவர் ஞானாக்கா என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

நாட்டின் அரசியல் அரங்கில் ஆளும், எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் பலர் ஞானாக்காவின் ‘வாக்கை’ நம்பியிருப்பதால், அனுராதபுரத்தில் ஞானாக்கா தனக்கென தனி சாம்ராஜ்ஜியமே கட்டியெழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் மே 31-ம் திகதியுடன் இராணுவ தளபதி சவேந்திர சில்வா (Shavendra Silva) பதவி விலகவுள்ளதாக இன்று (26-05-2022) அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பதவி விலகலின் பின்னணியில் ஞானக்காவின் கடுமையாக உத்தரவு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் போது ஞானக்காவின் வீடும் ஹோட்டலும் தீக்கிரையானது.

இதேவேளை இராணுவப் பிரிவினர் பாதுகாப்பில் இருந்ததாகவும் ஆனால் அவர்கள் அதைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஞானக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் இராணுவ தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வாவும் இதே காரணத்தின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளார் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.