பிரதமர் இன்று சென்னை வருகை : பாதுகாப்புக்கு 22 ஆயிரம் போலீசார்

0
75

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் அவர், 28 ஆயிரத்து 500 கோடி ரூபாயிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.

பிரதமர் வருகையையொட்டி, 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின், முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடி, அரசு விழாவில் பங்கேற்பதற்காக, இன்று ஹைதராபாதில் இருந்து, மாலை 5:10 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறார்.அவரது நிகழ்ச்சி நிரல்படி, விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் ஐ.என்.எஸ்., அடையாறு சென்று, அங்கிருந்து விழா நடக்கும், நேரு உள் விளையாட்டரங்குக்கு காரில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து, சூழ்நிலைக்கேற்ப சாலைப் பயணமா அல்லது வான்வழி பயணமா என்பது முடிவு செய்யப்படும்