மக்கள் அழைத்தால் மஹிந்த மீண்டும் வருவார்! – ஹேரத்

0
567
Sri Lanka's Prime Minister Mahinda Rajapaksa signs documents during his swearing-in ceremony at the sacred Kelaniya Raja Maha Buddhist temple, outside the capital Colombo on August 9, 2020. - Sri Lanka's ruling Rajapaksa brothers won an unprecedented two-thirds majority at the August 5 parliamentary elections that allowed them to rewrite the constitution and increase their power. (Photo by Ishara S. KODIKARA / AFP)

மக்கள் கோரிக்கை விடுத்தால் மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவார் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார். எனினும், மக்கள் அவரை மீள அழைத்தனர். அவரும் வந்து ஆட்சியை பிடித்தார்.

எனவே, மக்கள் கோரினால் அவர் மீண்டும் வருவார் எனவும் அவர் கூறினார். மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் ஆதரவு வழங்குவோம் என்றும் தற்போதைய சூழ்நிலையில் இணைந்து பயணிப்பதுதான் சிறப்பு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்தார்.