கொலை முயற்சியில் இருந்து தப்பிய ரஷ்ய ஜனாதிபதி புடின்!

0
230
Russian President Vladimir Putin listens during a meeting with government officials via video conference at the Novo-Ogaryovo residence outside Moscow, Russia, Monday, March 22, 2021. Putin said he will get vaccinated against the coronavirus on Tuesday, months after widespread vaccination has started in Russia. (Alexei Druzhinin, Sputnik, Kremlin Pool Photo via AP)

உக்ரைனை ஆக்கிரமித்த காலப்பகுதியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் இதனை தெரிவித்துள்ளார்.

2022, பெப்ரவரி 24ஆம் திகதியன்று இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஷ்ய ஜனாதிபதியின் உடல்நிலை குறித்தும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு அண்மையில் அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் எதிர்வரும் ஆகஸ்ட் நடுப்பகுதியில் உக்ரைன் போர் ஒரு திருப்புமுனையை எட்டும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவடையும் என்றும் உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து ரஷ்யாவில் தலைமை மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, 2017 இல் அவர் குறைந்தது ஐந்து படுகொலை முயற்சிகளில் இருந்து தாம் தப்பியதாக புடின் தெரிவித்துள்ளார்.

எனினும் தனது பாதுகாப்பைப் பற்றி தான், கவலைப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.