சேவையில் இருந்து விலகுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

0
310

க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பேருந்து சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கப்பம் கோருபவர்கள் பேருந்துகளுக்கு எரிபொருள் கோரியதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.