மனித பேரழிவை ஏற்படுத்துகிறது ரஷ்யா – ஜோ பைடன்!

0
556

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் உலகளாவிய பிரச்சனை எனக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), இந்தோ – பசிபிக் அமைப்பைச் சேர்ந்த நாடுகள் பொறுப்பை ஏற்று வழிநடத்தும் என தெரிவித்தார்.

குவாட் உச்சி மாநாட்டில் பேசிய பைடன்(Joe Biden), ஜனநாயகத்திற்கும் எதேச்சதிகாரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டினார்.

ரஷ்யா, உக்ரைன் உடனான போரை தொடரும் வரை இந்தோ – பசிபிக் நாடுகள் உலகளவில் பொறுப்புகளை ஏற்று வழிநடத்தும் என குறிப்பிட்டார்.

மேலும் ரஷ்யாவின் போர் நடவடிக்கை மனித பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பைடன் (Joe Biden) கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.