தலையில் கடன் சுமை; உலகின் முன்னணி நிதி நிறுவனத்தை வரவழைக்க தீர்மானம்!

0
326
உலகின் முன்னணி நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களான Lazard மற்றும் Clifford Chance ஆகிய நிறுவனங்களை இலங்கைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக ​ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

RBS & Clifford Chance Report on GRG Branded 'Whitewash' | LEXLAW Solicitors  & Barristers


நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் ரணில் தலைமையிலான புதிய அரசாங்கம் இலங்கை கடன்களை மீள செலுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வருகின்றது.

அதன் பின்னனியிலேயே மேற்குறிப்பிட்ட நிறுவனங்களை இலங்கைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.