அஜித் நிவாட் கப்ராலுக்கு பயணத் தடை நீடிப்பு!

0
69

  இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜுலை மாதம் 25 ஆம் திகதி வரை அந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல பிறப்பித்துள்ளார்.

முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.