பொருளாதார நெருக்கடிக்கு பொதுத் தேர்தல் நடத்துவதே ஒரே தீர்வு!

0
597

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சகல பிரச்சினைகளுக்கும் ஒரேயொரு தீர்வே உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காண்பதற்கு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதே ஒரே தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கோரிக்கைகளை அரசியல்வாதிகள் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிவாயு, பால்மா, எரிபொருள், உரம் போன்றவற்றை மக்கள் கோரிய போது ஜனாதிபதியோ, அமைச்சர்களோ அதற்கு செவிசாய்க்கத் தவறியதனால் மக்கள் தொடர்ந்தும் கோருவதில் பயனில்லை என தீர்மானித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே கோட்டாபயவை வீடு செல்லுமாறு மக்கள் கோரியதாகவும் அந்த வீட்டில் ரணில் வந்து அமருவதை மக்கள் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.