சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த CID

0
89

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இவர்கள் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி கடந்த 09ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.