வெளி விவகார செயலாளராக அருணி விஜேவர்தன பொறுபேற்றார்!

0
487

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளரான அருணி விஜேவர்தன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தின் பின்னர், வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன அமைச்சின் பணி அதிகாரிகளிடம் உரையாற்றினார்.

இலங்கை வெளிநாட்டு சேவையின் உறுப்பினரான, வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, 34 வருடங்களாக வெளிநாட்டு சேவையில் ஈடுபட்டுள்ளார்.

அதோடு, கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களிலும், சர்வதேச நிறுவனங்களிலும் பல பதவிகளை வகித்துள்ளார்.

இது குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தனது வெளிநாட்டுப் பணிகளில், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம், மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றில் அருணி விஜேவர்தன பணியாற்றியுள்ளார்.

மேலும் ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், வியன்னாவில் உள்ள ஐ.நா. அமைப்புக்களுக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் அருணி விஜேவர்தன பணியாற்றியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.