பிரான்ஸில் கழுத்து அறுக்கப்பட்டு இளைஞன் படுகொலை!

0
336

Epinay-sous-Sénart (Essonne) இல் ஒரு இளைஞன் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குழு என்கவுண்டரின் முடிவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவருகிறது. இரு தரப்பிலும் ஏற்பட்ட மோதலில், ஒரு இளைஞன் மற்றொரு நபரின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இளைஞன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடிவிட்டதாகவும், கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.