பிரித்தானியாவின் பணக்கார பட்டியலில் இடம்பிடித்த நிதியமைச்சர்!

0
705

பிரித்தானிய நிதியமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak) மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி (Akshata Murthy) ஆகியோர்  250 பேர் பணக்கார பட்டியலில் முதல் முறையாக இடம் பிடித்திருப்பதாக சண்டே டைம்ஸின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பணக்கார பட்டியலில் இவர்கள் 222 வது இடத்தில் உள்ளனர்.

அண்மையில், அக்ஷதா மூர்த்தியின் வரி விவகாரங்கள் ஆய்வுக்கு உட்பட்டது, அதில் அவர் வெளிநாட்டு வருமானத்திற்கு பிரித்தானிய வரி செலுத்தவில்லை.

இந்திய ஐ.டி கோடீஸ்வரரின் மகளான அக்ஷதா மூர்த்தி, பின்னர் தனது சம்பாத்தியம் அனைத்திற்கும் பிரித்தானிய வரி செலுத்த ஒப்புக்கொண்டார்.

அவரது தந்தை நாராயண மூர்த்தியின் ஐ.டி நிறுவனமான Infosys இல் அவரது 0.9% பங்கு, சுமார் £690m என மதிப்பிடப்பட்டுள்ளது.

டோம் அல்லாத அந்தஸ்தைப் பயன்படுத்தியதன் மூலம் அவர் £20 மில்லியன் வரியைச் சேமித்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சண்டே டைம்ஸ், ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி தம்பதியினர் இப்போது பணக்காரர்கள் பட்டியலில் முதல்முறையாக தோன்றியதாகக் கூறியது.

ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு பிரித்தானியாவில் இருக்கும் பணக்கார தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் மதிப்பு £711bn ஆகும், இது கடந்த ஆண்டு £658bnஆக இருந்தது. இந்த ஆண்டு 8% உயர்வு கண்டுள்ளது.