அமெரிக்காவை அச்சுறுத்தும் மற்றொரு மர்ம நோய்!

0
88

மர்மமான ஹெபடைடிஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் மற்றொரு குழந்தை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் இன்று உறுதி செய்துள்ளனர்.

இதனால் குறித்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் (சிடிசி) தொற்று நோய்களுக்கான துணை இயக்குனர் வைத்தியர் ஜே பட்லர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இறப்பு குறித்து வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இறப்பு எங்கு நிகழ்ந்தது அல்லது ஹெபடைடிஸ் நோயால் இறந்த குழந்தையின் வயதை அவர் வெளிப்படுத்தவில்லை. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவில் ஐந்து பேரும் பாலஸ்தீனம் மற்றும் அயர்லாந்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 35 மாநிலங்களில் மொத்தம் 180 ஹெபடைடிஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் இந்த நோய் கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். 15 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளன.

உலகளவில் 500 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவங்களின் பின்னணியில் விஞ்ஞானிகள் குழப்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.