அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் களமிறங்கும் இலங்கையர்!

0
246

அவுஸ்திரேலியாவின் 47வது நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டாட்சி தேர்தலில் அவுஸ்திரேலியாவில் உள்ள Skullin தொகுதியில் இலங்கையர் ஒருவர் போட்டியிடுகிறார்.

மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரும் மொரட்டுவையை வதிவிடமாகவும் கொண்ட விரோஷ் பெரேரா அவுஸ்திரேலியாவில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் களமிறங்கும் இலங்கையர்

விரோஷ் வணிக மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளராக 13 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

நாளை (21) தேர்தல் நடைபெற உள்ளது.

தான் ரே்தலில் போட்டியிடுவது தொடர்பில் விரோஷ் தெரிவிக்கையில்,

” விக்டோரியா மாகாணத்திற்கு 38 லிபரல் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் நானும் ஒருவன். எனது திறமைகள் மற்றும் தொழில்முறை திறன்களின் அடிப்படையில் நான் லிபரல் கட்சிக்கு மதிப்புமிக்க நபராக இருப்பேன் என்று நம்புகிறேன். கடந்த காலத்திலும் இதே எம்.பி.க்கள் குழுவே ஆசனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. நமக்கு மாற்றம் வேண்டும். ஸ்கல்லின் தொகுதியில் மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதுடன், வாழ்க்கைச் செலவைக் குறைப்பது, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது மற்றும் குடும்பங்களின் சமூக மதிப்பைப் பாதுகாப்பது என்பவற்றை நான் செய்வேன் என நம்புகிறேன். ” என்று விரோஷ் கூறினார்.