ஜெலன்ஸ்கியைக் காதலிக்கும் புடின் மகள்!

0
364

ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை காதலிப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புடினுடைய மகளான கேத்தரினா (Katerina Tikhonova, 35) ஜெலன்ஸ்கியைத்தான் காதலிக்கிறார்.

A source of strength for millions - Meet Ukraine's first lady Olena  Zelenska - The wife of Volodymyr Zelensky, a fashion icon who went from  camera-shy screenwriter to a symbol of valor. -
Volodymyr Zelenskyy with his wife

எனினும், அது உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கேத்தரினா ரஷ்யாவின் முன்னணி பாலே நடனக் கலைஞரான இகோர் ஜெலன்ஸ்கி (Igor Zelensky, 52) என்பவரைக் காதலிக்கிறாராம்.

இருவருக்கும் ஒரு குழந்தை கூட உள்ளதாம். அதேவேளை இதற்கு முன் கேத்தரினா ரஷ்யாவின் இளம் கோடீஸ்வரரான Kirill Shamalov (40) என்பவரை திருமணம் செய்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 2017ஆம் ஆண்டு கேத்தரினா ஜெலன்ஸ்கியை காதலிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து தம்பதியர் பிரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கேத்தரினாவே ஜேர்மனியின் Munich நகரில் வாழும் ஜெலஸ்கியை சந்திப்பதற்காக பல முறை அங்கு சென்றுள்ளதாகவும் உக்ரைன் போருக்கு முன் வரை கேத்தரினா ஜேர்மனியில் தன் காதலரான ஜெலன்ஸ்கியுடன் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

புடின் மகளின் காதலர் ஜெலன்ஸ்கி ஜார்ஜியா நாட்டுப் பின்னணி கொண்டவர் எனவும் கூறப்படுகின்றதது.