கனடா நாடாளுமன்றத்தில் கன்னட மொழியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்

0
613

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவரான கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கனேடிய நாடாளுமன்றத்தில் தனது தாய்மொழியான கன்னட மொழியில் பேசும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

Chandra Arya என்னும் அந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினர் தான் தனது தாய்மொழியான கன்னட மொழியில் கனடா நாடாளுமன்றத்தில் பேசியதாகவும் 50 மில்லியன் மக்கள் பேசும் இந்த அழகான மொழி நீண்ட வரலாறு கொண்டது என்றும் கூறியுள்ளார்.

Chandra Arya | Team Trudeau

அத்துடன் அவர் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் இந்தியாவுக்கு வெளியே நாடாளுமன்றம் ஒன்றில் கன்னட மொழி பேசப்படுவது உலகில் இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.