அபாய நிலையில் உள்ள சிறுவர் காப்பகம்!

0
68

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான டீசைட் தோட்டத்தில் மின் கம்பம் ஒன்று சரிந்து விழும் நிலையில் உள்ளதாக எச்சரிக்கை தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும், தற்போது இந்த பகுதியில் கடுமையான காற்று வீசு வருகின்றது.

இதனால் எந்த நேரத்திலும் அந்த மின் கம்பம் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு குழந்தைகளை விட்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மஸ்கெலியா மின்சார சபை முன் வந்து அவ்விடத்தில் உள்ள அந்த மின் கம்பத்தை மாற்றி வேறு பகுதிகளில் நாட்டுவதுடன் இனியும் மர கம்பங்கள் நாட்டாமல் கொங்கிறீட் தூண்கள் இட்டு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

நிர்வாகம் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.