மைத்திரியை ஏமாற்றிய சகாக்கள் !

0
255

மைத்திரிபால சிறிசேன கட்சியின் தீர்மானத்துக்கு மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுக்கவில்லை.

அத்துடன் அமைச்சுப் பதவிகளை ஏற்க வேண்டிய அவசியமுமில்லை அரசாங்கத்துக்கு தேவையான ஆதரவை வழங்க மத்திய குழு தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.