உக்ரைனுக்கான நிதியை நட்பு நாடுகள் அதிகரிக்க வேண்டும்! அமெரிக்கா

0
625
FILE PHOTO: U.S. Treasury Secretary Janet Yellen addresses the U.S. Conference of Mayors winter meeting in Washington, U.S. January 19, 2022. REUTERS/Jonathan Ernst/File Photo

உக்ரைன் மீது ரஷ்யா இரண்டு மாதங்களுக்கு மேலாக போரை தொடுத்து வருகின்றது.

இந்த நிலையில் உக்ரைனின் நட்பு நாடுகள் அவர்களுக்கான நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் தெரிவித்துள்ளார்.

பிரஸ்ஸல்ஸ் பொருளாதார மன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் இந்த கோரிக்கையை விடுத்தார்.

அமெரிக்க செனட் சபை 40 பில்லியன் டொலர் இராணுவ மற்றும் மனிதாபிமான உதவியை வழங்க தீர்மானித்ததிற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய் மீதமான இறக்குமதி வரிகளைக் கட்டம் கட்டமாக தடை செய்யலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.