இலங்கை குறித்து அமெரிக்க பொருளாதார நிபுணர் விடுத்த எச்சரிக்கை

0
476

இலங்கையின் தற்போதைய நிலவரப்படி நாடு வங்குரோந்து நிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்கே (Steve Hanke) எச்சரித்துள்ளார்.

இலங்கை ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையில் உயர் பணவீக்கத்தினால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பணவீக்கம் 21.5 சதவீதம் என்ற போதிலும், அவரது அளவீடுகளின்படி உண்மையான பணவீக்கம் 132 சதவீதம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்மைய, அதிகாரப்பூர்வ பணவீக்க விகிதத்தை விட உண்மையான பணவீக்க விகிதம் 6 மடங்கு அதிகமாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இறுதியில் அரசியல் பிரச்சினையே உருவாகும் எனவும் இத்தகைய உயர் பணவீக்கம் ஒரு பொருளாதாரப் பேரழிவு அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இதனால் பணக்காரர்களை விட ஏழை மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஹென்கே (Steve Hanke) கூறியுள்ளார்.