மருத்துவமனையிலிருந்த பெண்ணுக்கு நேரில் சென்று பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்

0
285

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு டிப்ளமோ பட்டத்தினை பல்கலைக்கழகம் நேரில் சென்று வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Dillard பல்கலைக் கழகத்தில் ஜாடா சைல்ஸ் (Jada Sayles) என்ற இளம்பெண் டிப்ளமோ படிப்பினை நிறைவு செய்துள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழா கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது.

Woman Welcomes Baby Just Hours Before College Graduation | PEOPLE.com

ஆனால் 13ஆம் திகதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாடா சைல்ஸ் (Jada Sayles) பிரசவ வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் அவருக்கு வழங்க வேண்டிய டிப்ளமோ பட்டத்தை மருத்துவமனைக்கு நேரில் சென்று வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது.

அந்த பெண்ணும் குழந்தை பிறந்த மகிழ்ச்சி ஒருபுறம், பட்டம் பெற்ற மகிழ்ச்சி மறுபுறம் என இரட்டை மகிழ்ச்சியில் திளைத்தார்.

Woman Welcomes Baby Just Hours Before College Graduation | PEOPLE.com